toolbar powered by Conduit
Showing posts with label எந்திரன். Show all posts
Showing posts with label எந்திரன். Show all posts

Monday, October 18, 2010

17 நாட்களில் ரூ 318 கோடி; அனைத்து சாதனைகளையும் தகர்த்தது எந்திரன்!

ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம் எந்திரன். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் ரூ 162 கோடி செலவில் உருவானது.

கடந்த அக்டோபர் முதல் தேதி உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. ஜப்பான் போன்ற சில நாடுகளில் இன்னும் இந்தப் படம் வெளியாகவில்லை.

வெளியான மூன்று வாரங்களுக்குள் ரூ 318 கோடியை வசூலித்து, இந்தியாவின் அனைத்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் தகர்த்துள்ளது எந்திரன் / ரோபோ.

படம் வெளியாகி 17 நாட்கள் முடிந்த நிலையில், இந்தப் படத்தின் வசூல் விவரங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வந்தன. ஆனால் சன் பிக்ஸர்ஸ் அமைதி காத்தது. கடந்த வாரம் எந்திரனின் உலகளாவிய வசூல் ரூ 225 கோடி என முதல்முறையாக அறிவித்தது சன் பிக்ஸர்ஸ்.

அமெரிக்காவில் பி4யு, பிகஸ் மூவீஸ் இந்தப் படத்தை வெளியிட்டன. இங்கு மட்டும் ரூ 24 கோடி வரை (எந்திரன் / ரோபோ) இந்தப் படம் வசூலித்துள்ளளது. அய்ங்கரன் – ஈராஸ் வெளியீடாக பிரிட்டனில் திரையிடப்பட்ட இந்தப் படம் ரூ 8 கோடிக்கும் மேல் வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது. இன்னும் தொடர்ந்து ஓடிக் கொண்டுள்ளது.

மேலும்...

allvoices

எந்திரன் வெளிநாட்டு வசூல் ரூ 61 கோடி! – அய்ங்கரன்-ஈராஸ் அறிவிப்பு

எந்திரன் திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் ரூ 61 கோடியை வசூலித்துள்ளதாக அய்ங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அய்ங்கரன் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வைத்துள்ள ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்திரன் தமிழ், தெலுங்கு பதிப்புகள் மட்டும் அமெரிக்காவில் ரூ 20 கோடியை ஈட்டியுள்ளது. இந்திப் பதிப்பும் கணிசமான வசூலைக் குவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் ரூ 20 கோடியும், பிரிட்டனில் ரூ 8 கோடியும், ஐக்கிய அரபு நாடுகளில் ரூ 7 கோடியும், மலேஷியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ரூ 21 கோடியும், பிற பகுதிகளில் ரூ 5 கோடியும் இதுவரை வசூலித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வசூல் ரஜினி – ஷங்கர் கூட்டணியில் முன்பு வந்த சிவாஜியை விட பல மடங்கு அதிகமாகும்.

மேலும்....

allvoices

இமயமலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி; படத்தொகுப்பு

எந்திரனின் இமாலய வெற்றிக்குப் பிறகு இமயமலைப் பயணம் மேற்கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தப் பயணத்தின்போது அவர் பாபாவின் குகைக்குச் சென்று தியானம் செய்தார்.

இமயமலைப் பகுதியில் அவர் எடுத்துக்கொண்ட அசத்தல் படங்களின் படத்தொகுப்பைக் காண இங்கே அழுத்தவும்

allvoices

Sunday, October 17, 2010

இலவச எந்திரன் டிக்கெட்; ஐநாக்ஸில் வெற்றியாளர்கள்; படத்தொகுப்பு

எம்மால் அறிவிக்கப்பட்ட இலவச எந்திரன் டிக்கெட் பரிசுப் போட்டியில் வென்றவர்களுக்காக இன்று காலை 8.15 அளவில் சென்னை சிட்டி சென்டரில் சிறப்புக் காட்சி ஒழுங்கமைக்கப்பட்டது.

ஐநாக்ஸில் வெற்றியாளர்கள் தங்கள் படச் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு சிறப்புக்காட்சியை கண்டு ரசித்தனர்.

அதன் படத்தொகுப்பு.

allvoices

Monday, October 11, 2010

எந்திரன் சாதனை மிகுந்த மன‌ நிறைவைத் தருகிறது! – ஷங்கர்

எந்திரன் படத்துக்கு மக்கள் தந்துள்ள வரவேற்பு, மீடியா அளித்துள்ள பாராட்டு, வசூலில் அந்தப் படம் நிகழ்த்தும் சாதனைகள் நிறைவையும் மகிழ்ச்சியும் தருகிறது, என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது ப்ளாக்கில் ஆங்கிலத்தில் அவர் எழுதியுள்ளதாவது:

மேலும்..

allvoices

Saturday, October 9, 2010

எந்திரன் படப்பிடிப்பின்போது ரஜினியுடன் ராகவ் எடுத்துக்கொண்ட படத்தொகுப்பு‌

எந்திரன் படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிகர்களின் ம்னதைக் கவர்ந்த நடிகர் ராகவ் படப்பிடிப்பின்போது ரஜினி, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலருடனும் எடுத்துக்கொண்ட படங்களின் புகைப்படத்தொகுப்பை இங்கே சொடுக்குவதன் மூலம் காணலாம்.

allvoices

Thursday, October 7, 2010

எந்திரனின் அமெரிக்க சாதனை இது

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் அமெரிக்காவில் வெளியான முதல் வாரத்தில் இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களை(சுமார் 9 கோடி)சம்பாதித்துள்ளது. இது இதுவரை தமிழ்ப் படங்கள் எதுவும் செய்யாத சாதனையாகும் அத்துடன் அமீர் கான் படம் போன்று வசூல் செய்வதாகவும் உபரித் தகவலொன்ரும் வெளியாகியுள்ளது.

மேலும்...

allvoices

பாடல்கள் பற்றிய சங்கரின் டிஸ்கஸ்சன்

எந்திரன் படம் ரிலீசாகி தமிழ் சினிமா வரலாறு காணாத அளவு வசூலை குவித்து வருகிறது. இயக்குனர் சங்கருக்கு பல இடங்களிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது, அது மட்டுமல்லாமல் பல இடங்களிலிருந்தும் தங்களுக்கு படம் செய்து தரச்சொல்லி கோரிக்கைகளும் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் சங்கரின் எண்ணம் முழுவதும்


மேலும் படிக்க‌

allvoices

Wednesday, October 6, 2010

பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்ட ரோபோ பிரீமியர் ஷோ ‍புதிய படங்கள்

மும்பையில் நடந்த ரோபோ பிரீமியர் ஷோ வில் ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

வண்ணமயமான புதிய படங்களைக்காண இங்கே கிளிக் செய்யவும்

allvoices

எந்திரன் வெற்றியால் ரஜினி மகிழ்ச்சி

நேற்று முன் தினம் மும்பையில் நடந்த ரோபோ பிரீமியர் ஷோவில் அமிதாப், ஆமிர்கான், தேவ் ஆனந்த் மற்றும் பல முக்கியமான பாலிவுட் புள்ளிகள் உட்பட‌ ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள்.

பிரீமியர் ஷோவிற்கு வந்த அனைத்து நட்சத்திரங்களும் ரஜினியின் ரோபோ கேரக்டரில் மெய்மறந்து போனார்கள் என்றால் மிகையாகாது.....

மேலும் படிக்க‌

allvoices

Monday, October 4, 2010

பிரிட்டனில் எந்திரன் வசூல் சாதனை..!

பிரிட்டனின் பாக்ஸ் ஆபீஸில் எந்திரன் சாதனை புரிந்து வருகிறது. வெளியான முதல் நாள் மட்டும் ரூ35. 33 லட்சம் குவித்துள்ளது எந்திரன்.

இந்தப் படத்தைவிட அதிக தியேட்டர்களில் வெளியான இந்திப் படம் அஞ்ஜானா அஞ்ஜானி ரூ 35 லட்சம் வசூலித்துள்ளது.

பிரிட்டனில் 40 திரையரங்குகளில் திரையிடப்பட்ட எந்திரன் முதல் நாளில் மட்டும் 50424 பவுண்ட்களையும் (ரூ. 35,32,496.26) , இந்தப் படத்துடன் வெளியான அஞ்ஜானா அஞ்ஜானி 53 திரையரங்குகளில் 50036 பவுண்ட்களையும் (ரூ 35, 07,711.50) வசூலித்துள்ளதாக பிரபல இணையதளம் தெரிவித்துள்ளது.

மேலும்..

allvoices

Sunday, October 3, 2010

எந்திரன் முதல் ஷோவில் விசிலடித்து படம் பார்த்த சிம்பு !


தலைவர் படத்தைத் தனியா பார்க்கிறதாவது... முதல் நாள் முதல் ஷோ, அதுவும் சக ரசிகர்களுடன் பார்த்தால்தான் எனக்கெல்லாம் திருப்தியா இருக்கும் என காசி திரையரங்கில் எந்திரன் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வந்த சிம்புவின் ஸ்டேட்மெண்ட் இது. 

கடந்த காலங்களில் இவர் ரஜினி பற்றி அடித்த கமெண்ட்டுகளால் கடுப்பிலிருந்த ரசிகர்கள் , இவரைப் பார்த்ததும் சற்று கோபத்துடன் கோஷமெழுப்பினர்.ஆனால் அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் வந்த அவர் ரசிகர்களுடன் சேர்ந்து விசிலடித்து ரஜினிக்கு புகழாரம் சூட்ட, ரசிகர்கள் உற்சாகமாகிவிட்டனர்.

மேலும்..

allvoices

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ் -‍ 2ம் இடத்தில் எந்திரன்

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் / ரோபோ திரைப்படம். படம் வெளியாவதற்கு முதல் நாள் இரவு அமெரிக்கா மற்றும் கனடாவின் பல இடங்களில் கட்டண சிறப்புக் காட்சி நடைபெற்றது. ஹாலிவுட் படங்களுக்குத்தான் இதுபோன்ற காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த சிறப்புக் காட்சிகளில் வசூலான தொகை, மற்ற தமிழ்ப் படங்களின் ஓவர்சீஸ் வசூலுக்கு நிகராக இருந்ததாக அமெரிக்க விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்...

allvoices

Saturday, October 2, 2010

'அஞ்சானா அஞ்சானி' இந்திப்படத்தை ஓரங்கட்டிய எந்திரன்

‘எந்திரனின்’ பாக்ஸ் ஆபிஸ் வசூலினை பார்க்கும் எவருமே, ‘ஆ’வென வாயை பிளக்கின்றனர். செவ்வாய் அன்று வழக்கமாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளியிடப்படும் என்பதால், அனைவரும் செவ்வாய்க்கிழமைக்காக ஆவலுடன் காத்திருகின்றனர்.

அதே சமயம் ‘எந்திரனுக்கு’ மிகுந்த போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட, ‘அஞ்சானா அஞ்சானி’ என்ற இந்திப் படம், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ‘எந்திரனுக்கு’ எவ்வித போட்டியையும் அளிக்கவில்லை.

மேலும்...

allvoices

தொடர்ந்து மூன்று தடவை "எந்திரன்" பார்த்த தனுஷ்

நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனுமான தனுஷ் எந்திரன் வெளியான முதல் நாளே அப்படத்தை மூன்று தடவைகள் பார்த்து தான் ஒரு தீவிர ரஜினி ரசிகன் தான் என்பதை நிரூபித்துள்ளார்.

மேலும்...

allvoices

Thursday, September 23, 2010

சென்னையில் ஒரு வாரம் நடக்கும் ‘ரஜினி திரைத் திருவிழா’!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அவரை கவுரவப் படுத்த கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் சினிமாஸ் ரஜினி திரைத் திருவிழாவை நடத்துகிறது.

இது தொடர்பாக ஏஜிஎஸ் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பு:

ரஜினிகாந்த்-

அறிமுகம் தேவையில்லாத அதிசயப் பிறவி அவர்.

இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார், தனது ஸ்டைல் மற்றும் வித்தியாசமான நடிப்பால் நான்கு தசாப்தங்களாக இந்திய சினிமாவில் ஆட்சி செலுத்தும் பாக்ஸ் ஆபீஸ் ‘பாட்ஷா’ !

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்..

allvoices