ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம் எந்திரன். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் ரூ 162 கோடி செலவில் உருவானது.
கடந்த அக்டோபர் முதல் தேதி உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. ஜப்பான் போன்ற சில நாடுகளில் இன்னும் இந்தப் படம் வெளியாகவில்லை.
வெளியான மூன்று வாரங்களுக்குள் ரூ 318 கோடியை வசூலித்து, இந்தியாவின் அனைத்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் தகர்த்துள்ளது எந்திரன் / ரோபோ.
படம் வெளியாகி 17 நாட்கள் முடிந்த நிலையில், இந்தப் படத்தின் வசூல் விவரங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வந்தன. ஆனால் சன் பிக்ஸர்ஸ் அமைதி காத்தது. கடந்த வாரம் எந்திரனின் உலகளாவிய வசூல் ரூ 225 கோடி என முதல்முறையாக அறிவித்தது சன் பிக்ஸர்ஸ்.
அமெரிக்காவில் பி4யு, பிகஸ் மூவீஸ் இந்தப் படத்தை வெளியிட்டன. இங்கு மட்டும் ரூ 24 கோடி வரை (எந்திரன் / ரோபோ) இந்தப் படம் வசூலித்துள்ளளது. அய்ங்கரன் – ஈராஸ் வெளியீடாக பிரிட்டனில் திரையிடப்பட்ட இந்தப் படம் ரூ 8 கோடிக்கும் மேல் வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது. இன்னும் தொடர்ந்து ஓடிக் கொண்டுள்ளது.
மேலும்...
No comments:
Post a Comment