எந்திரன் திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் ரூ 61 கோடியை வசூலித்துள்ளதாக அய்ங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அய்ங்கரன் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வைத்துள்ள ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்திரன் தமிழ், தெலுங்கு பதிப்புகள் மட்டும் அமெரிக்காவில் ரூ 20 கோடியை ஈட்டியுள்ளது. இந்திப் பதிப்பும் கணிசமான வசூலைக் குவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் ரூ 20 கோடியும், பிரிட்டனில் ரூ 8 கோடியும், ஐக்கிய அரபு நாடுகளில் ரூ 7 கோடியும், மலேஷியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ரூ 21 கோடியும், பிற பகுதிகளில் ரூ 5 கோடியும் இதுவரை வசூலித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வசூல் ரஜினி – ஷங்கர் கூட்டணியில் முன்பு வந்த சிவாஜியை விட பல மடங்கு அதிகமாகும்.
மேலும்....
No comments:
Post a Comment