நடிகர் லாரன்ஸ் சென்னையில் அறக்கட்டளை வைத்து குழந்தைகளுக்கு மருத்துவ வசதி அளிப்பதை கேள்விபட்டு அவரை அணுகினர். லாரன்ஸ் அச்சிறுவனை விஜய்யிடம் அழைத்து சென்றார்.
சிறுவனை பார்த்த விஜய் எவ்வளவு செலவானாலும் நான் பார்த்து கொள்கிறேன். சிறுவனை காப்பாற்றுங்கள் என்றார். மலர் ஆஸ்பத்திரி டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் சிறுவனை பரிசோதித்து இதயத்தில் இருந்து கிட்னிக்கு செல்லும் வால்வில் கோளாறு உள்ளதென்றும் ஆபரேஷன் செய்தால் பல லட்சங்கள் செலவாகும் என்றும் கூறினார்.
விஜய் செலவை ஏற்றதால் சிறுவன் அங்கு அனுமதிக்கப்பட்டான். அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் சிறுவன் பிழைத்துக் கொண்டான். புஷ்பா கார்டனில் காவலன் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சிறுவன் யஷ்வந்த் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தான். அவன் பெற்றோரும் விஜய் கையை பிடித்து நன்றி பெருக்கோடு கண்ணீர் சிந்தினர். உருக்கமான சந்திப்பாக அது இருந்தது.
அதன் புகைப்படத்தொகுப்பு
No comments:
Post a Comment